வாழ்க்கை என்பதே உற்சாகம் தானே?*

🍑 *வாழ்க்கை என்பதே உற்சாகம் தானே?*

🌻சாத்தான் ஒருமுறை தன் தொழிலை நிறுத்திவிடலாம் என்று முடிவு செய்தான்.

🌻அவன் பயன்படுத்தி வந்த கருவிகளைச் சந்தையில் விற்பனைக்கு வைத்தான்.

🌻 *கோபம், காமம், அகங்காரம், பொறாமை, பகை உணர்வு, பேராசை, வீண் ஜம்பம் என எத்தனையோ கருவிகள் கடை பரப்பப்பட்டன.

🌻ஆனால் ஒரே ஒரு பை மட்டும் பிரிக்கப்படாமல் இருப்பதைப் பார்த்தனர் மக்கள்
“அது என்ன?” என்று கேட்டனர்.

🌻“இதனுள் இருப்பவை என்னிடம் இருப்பதிலேயே மிகவும் சக்தி வாய்ந்த கருவிகள். ஒரு வேலை மறுபடி தொழிலுக்குத் திரும்பலாம் என்று முடிவு செய்தால், எதற்கும் இருக்கட்டுமே என்று இவற்றை மட்டும் வைத்திருக்கிறேன்” என்றான் சாத்தான்.

🌻“எங்கே? திறந்து காட்டு”
“இவை வாழ்க்கையின் சாரத்தையே அழிக்கவல்லவை. ஒருபோதும் தோற்றதே இல்லை” என்றபடி சாத்தான் அந்தப் பையைத் திறந்து காட்டினான்.

🌻அதனுள் இருந்த கருவிகள் என்ன தெரியுமா?
சலிப்பு, உற்சாகமின்மை, விரக்தி இந்த மூன்றும்தான்.

🌻சாத்தானின் கருவிகளை வாங்கி வந்திருப்பவர்களில் சிலரை நீங்கள் வாழ்க்கையில் சந்தித்திருக்கலாம்.

🌻ஏன், சில கருவிகளை நீங்களே கூட வாங்கியிருக்கலாம்.
இலவசமாகக் கிடைத்திருந்தால்கூட வேண்டாம்.
அவற்றை விட்டெறியுங்கள்.

🌻உற்சாகமாக விரைந்து செல்லும் எறும்புகளைக் கவனியுங்கள். அதில் ஒரு எறும்பின் பாதையில் சும்மா விரலை வைத்து மறித்துப் பாருங்கள். அது நின்றுவிடாது. விரலைச் சுற்றிவரும் எங்கே வழி இருக்கிறது என்று தேடும்.

🌻 எத்தனைத் தடைகள் போட்டாலும் எப்படியாவது தன் பயணத்தைத் தொடரும். செத்து விழும் வரை அது உற்சாகத்தை இழப்பதும் இல்லை, நம்பிக்கையை விட்டுக் கொடுப்பதும் இல்லை.

🌻சிறு புல்லைப் பறித்து, அதன் வேர்களைப் பாருங்கள். என்னவொரு உற்சாகத்துடன் பூமியின் உள்ளே ஆழமாகக் கிளைவிட்டு அவை ஊன்றிக்கொண்டு இருக்கின்றன என்று புரியும்.

🌻உலகில் இருக்கும் எந்தவொரு உயிர்ச் சக்திக்கும் சலிப்பு என்பதே இல்லை.

🌻மனிதனின் குறுகிய மனதில்தான் சலிப்பும், எரிச்சலும், நம்பிக்கையின்மையும் ஊற்றெடுக்கின்றன.

*வாழ்க்கை என்பதே உற்சாகம் தானே?*

🌻ஒரு முடிவைக் கண்டு அதைத் தோல்வி என எதற்காக எரிச்சல் கொள்ள வேண்டும்?

🌻முதலில் நீங்கள் சந்தித்தது தோல்வி இல்லை. அதை முன் வைத்து உற்சாகமின்றி வேதனையும், எரிச்சலுமாக வெற்றிக்காகப் பாடுபடுகிறீர்களே, அதுதான் உங்களை நீங்கள் தோற்கடித்துக் கொள்ள வழிவகுக்கும்.

*இது நீங்கள் அறியவேண்டிய ரகசியம்.*

நன்றி : " *தன்னம்பிக்கை "*

No comments:

Post a Comment