வாழ்க்கை என்பதே உற்சாகம் தானே?*

🍑 *வாழ்க்கை என்பதே உற்சாகம் தானே?*

🌻சாத்தான் ஒருமுறை தன் தொழிலை நிறுத்திவிடலாம் என்று முடிவு செய்தான்.

🌻அவன் பயன்படுத்தி வந்த கருவிகளைச் சந்தையில் விற்பனைக்கு வைத்தான்.

🌻 *கோபம், காமம், அகங்காரம், பொறாமை, பகை உணர்வு, பேராசை, வீண் ஜம்பம் என எத்தனையோ கருவிகள் கடை பரப்பப்பட்டன.

🌻ஆனால் ஒரே ஒரு பை மட்டும் பிரிக்கப்படாமல் இருப்பதைப் பார்த்தனர் மக்கள்
“அது என்ன?” என்று கேட்டனர்.

🌻“இதனுள் இருப்பவை என்னிடம் இருப்பதிலேயே மிகவும் சக்தி வாய்ந்த கருவிகள். ஒரு வேலை மறுபடி தொழிலுக்குத் திரும்பலாம் என்று முடிவு செய்தால், எதற்கும் இருக்கட்டுமே என்று இவற்றை மட்டும் வைத்திருக்கிறேன்” என்றான் சாத்தான்.

🌻“எங்கே? திறந்து காட்டு”
“இவை வாழ்க்கையின் சாரத்தையே அழிக்கவல்லவை. ஒருபோதும் தோற்றதே இல்லை” என்றபடி சாத்தான் அந்தப் பையைத் திறந்து காட்டினான்.

🌻அதனுள் இருந்த கருவிகள் என்ன தெரியுமா?
சலிப்பு, உற்சாகமின்மை, விரக்தி இந்த மூன்றும்தான்.

🌻சாத்தானின் கருவிகளை வாங்கி வந்திருப்பவர்களில் சிலரை நீங்கள் வாழ்க்கையில் சந்தித்திருக்கலாம்.

🌻ஏன், சில கருவிகளை நீங்களே கூட வாங்கியிருக்கலாம்.
இலவசமாகக் கிடைத்திருந்தால்கூட வேண்டாம்.
அவற்றை விட்டெறியுங்கள்.

🌻உற்சாகமாக விரைந்து செல்லும் எறும்புகளைக் கவனியுங்கள். அதில் ஒரு எறும்பின் பாதையில் சும்மா விரலை வைத்து மறித்துப் பாருங்கள். அது நின்றுவிடாது. விரலைச் சுற்றிவரும் எங்கே வழி இருக்கிறது என்று தேடும்.

🌻 எத்தனைத் தடைகள் போட்டாலும் எப்படியாவது தன் பயணத்தைத் தொடரும். செத்து விழும் வரை அது உற்சாகத்தை இழப்பதும் இல்லை, நம்பிக்கையை விட்டுக் கொடுப்பதும் இல்லை.

🌻சிறு புல்லைப் பறித்து, அதன் வேர்களைப் பாருங்கள். என்னவொரு உற்சாகத்துடன் பூமியின் உள்ளே ஆழமாகக் கிளைவிட்டு அவை ஊன்றிக்கொண்டு இருக்கின்றன என்று புரியும்.

🌻உலகில் இருக்கும் எந்தவொரு உயிர்ச் சக்திக்கும் சலிப்பு என்பதே இல்லை.

🌻மனிதனின் குறுகிய மனதில்தான் சலிப்பும், எரிச்சலும், நம்பிக்கையின்மையும் ஊற்றெடுக்கின்றன.

*வாழ்க்கை என்பதே உற்சாகம் தானே?*

🌻ஒரு முடிவைக் கண்டு அதைத் தோல்வி என எதற்காக எரிச்சல் கொள்ள வேண்டும்?

🌻முதலில் நீங்கள் சந்தித்தது தோல்வி இல்லை. அதை முன் வைத்து உற்சாகமின்றி வேதனையும், எரிச்சலுமாக வெற்றிக்காகப் பாடுபடுகிறீர்களே, அதுதான் உங்களை நீங்கள் தோற்கடித்துக் கொள்ள வழிவகுக்கும்.

*இது நீங்கள் அறியவேண்டிய ரகசியம்.*

நன்றி : " *தன்னம்பிக்கை "*

மனஅழுத்தம்_இன்றி_வாழ_வழி #முறைகள்.!

#மனஅழுத்தம்_இன்றி_வாழ_வழி #முறைகள்.!
=================================

1) * காலையில்  முன்னதாகவே எழுந்துவிடுங்கள்.

2) * எங்கேயாவது செல்ல வேண்டியிருந்தால் அதற்குரிய ஆடைகள், பொருட்களை முன்கூட்டியே எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

3) * ஒரு காகிதத்தில் அன்றைய தினம் செய்ய வேண்டிய பணிகளையும், எப்போது செய்யப் போகிறோம் என்பதையும் குறித்து வையுங்கள்.

4) * காத்திருப்பது சிரமம் என்று கருதாதீர்கள். ஒரு புத்தகத்தை கையில் வைத்திருப்பது காத்திருத்தலை சுகமாக்கும். தேவையற்ற மன அழுத்தத்தைக் குறைக்கும்.

5) * வேலைகளைத் தள்ளி வைப்பது மன அழுத்தத்தை அதிகரிக்கும்.செய்யவேண்டியதை தாமதப்படுத்தாமல் செய்யுங்கள்.

6) * முன்கூட்டியே திட்டமிடுங்கள். எதையும் கடைசி நேரம் வரை காத்திருந்தபின் செய்வதைத் தவிருங்கள்.

7) * வேலை செய்யாதவைகளைக் கட்டி அழாதீர்கள். சரி செய்ய முயலுங்கள் காலணிஆனாலும் கடிகாரம் ஆனாலும். இல்லையேல் அவை தேவையற்ற மன அழுத்தத்தைத் தரக்கூடும்.

8) * சற்று முன்கூட்டியே செல்ல பழக்கப் படுங்கள். பத்து நிமிடத்தில் செல்லமுடிந்த இடத்துக்கு இருபது நிமிடத்திற்கு முன்பாகவே புறப்படுங்கள்.

9) * காஃபி , டீ  அதிகம் குடிப்பதைத் தவிருங்கள். புகை மது எல்லாம் வேண்டாம்.

10) * சில மாற்று யோசனைகளைக் கைவசம் வைத்திருங்கள். உதாரணமாக பஸ் தாமதமானால் இதை- இதைச் செய்வேன் என்பது போன்றவை.

11) * இறுக்கம் தளருங்கள். சில வேலைகள் தடைபடுவதாலோ, தாமதப்படுவதாலோ உலகம் முடிந்து விடப் போவதில்லை.

12) * தவறாய்ப் போன ஒரு விஷயத்தைக் குறித்து சிந்தித்துக்கொண்டே இருப்பதை விட, சரியாய் நிகழ்ந்த பலவற்றைக்குறித்து அடிக்கடி நினைத்து மகிழுங்கள்.

13) * செல்லும் இடங்கள் புதிய இடங்களாக இருந்தால் வழியை முதலிலேயேதெளிவாகக் கேட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

14) * சற்று நேரம் கைபேசிகளையும், தொலைபேசிகளையும் அணைத்துவிடுங்கள். ஓய்வு எடுங்கள் எந்தத்தொந்தரவும இன்றி.

15) * செய்வதற்கு இயலாத பணிகளோ, நேரமில்லாமையால் நாம் செய்யமுடியாது என்று நினைக்கும் பணிகளோ இருந்தால் , ‘மன்னிக்கவும்.. என்னால ்செய்ய இயலாது’ என்று சொல்லப்பழகுங்கள்.

16) * உணவு, உடை, உறைவிடம் தவிர்த்த எதுவும் உங்களை மன இறுக்கம் கொள்ளச் செய்யாமல் பார்த்துக்கொள்ளுங்கள். முன்னுரிமை எதற்குக்கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவு அவசியம்.

17) * எளிமையாக வாழுங்கள்.

18) * உற்சாகமான நண்பர்களுடன் பழகுங்கள் அதிக நேரம்.

19 * நன்றாகத் தூங்குங்கள். முடிந்தால் அலாரம் வைத்துத் தூங்குங்கள். தடையற்ற தூக்கத்துக்கு அது உதவும்.

20) * வீட்டில் பொருட்களை அதனதன் இடத்தில் ஒழுங்காக அடுக்கி வையுங்கள். அவசரமாய் தேடுகையில் அகப்படாத பொருள் மன அழுத்தத்தை த்தரும்.

21) *ஆழமாக , நிதானமாக  மூச்சை உள்ளே இழுத்து மெதுவாக வெளியே விடுங்கள்.

22) * எழுதப் பழகுங்கள். கவலைகளை, எரிச்சல்களை, தோல்விகளை குறைக்க எழுத்து வடிகாலாகும்.

23) * குழப்பம், கவலைகளை உள்ளுக்குள் புதைக்காமல் நம்பிக்கைக்குரிய நண்பர்களிடம் பகிருங்கள்.

24) * தினமும் உங்கள் மனதை மகிழச்செய்யும் செயல்கள் எதையேனும் ஒன்றைச் செய்யுங்கள். அதில் பொருளாதாரப் பயன் ஏதும் இல்லாவிட்டாலும் கூட.

25) * பிறருக்காக எதையேனும   செய்யப் பழகுங்கள். செய்யும் அனைத்து செயல்களையும் ஆத்மார்த்தமான அன்போடு செய்யுங்கள்.

26) * என்னை யாரும் புரிந்து கொள்ளவில்லையே எனும் முனகல்களைத் தவிர்த்து பிறரைப் புரிந்து கொள்ள முயலுங்கள்.

27) * உங்கள் உடை, நடை பாவனைகளினல் தன்னம்பிக்கை மிளிரட்டும். உடைகளை நன்றாக அணிவதே தன்னம்பிக்கையை அதிகரிக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

28) * நிறைய வேலைகளை ஒரே நாளில் முடிக்க நினைக்காதீர்கள்.ஒவ்வொரு வேலைக்கும் இடையே சரியான இடைவெளி விடுங்கள்.

29) * வார இறுதிகள், விடுமுறை நாட்களை மிகச் சிறப்பாகச் செலவிடுங்கள். வெளியே செல்வது, கடற்கரைக்குச் செல்வது என மனதைப் புத்துணர்ச்சியாக்குங்கள்.

30) * இன்றைய பணிகளை செவ்வனே செய்தால் நாளைய பணிகள் செவ்வனே நடைபெறும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

31) * பிடிக்காத வேலை இருந்தால் அதை முதலிலேயே முடித்து விடுங்கள். அப்போது தான் தொடர்ந்து செய்யும் பிடித்தமான வேலைகள் மனதை இலகுவாக்கும்.

32) *மன்னிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள், அடுத்தவர்களைக் காயப் படுத்தாமல் வாழப் பழகுங்கள்.

இவற்றில் சிலவற்றைப் பின்பற்றினாலே மன அழுத்தமற்ற வாழ்க்கை நமக்குவசப்படும்.